Thursday, March 15, 2007

வெட்கம்

முகிலுக்கு வெட்கமாம்
நிலவைக் கண்டு - ??
தன் கருமை வெளிப்படுமாம் இருளில்!!!

ஐ ல்வ் யு

பற்றற்ற வாழ்வில்
மட்டற்ற இன்பம் - ??
உன் வாக்கினில் மலர்ந்த
முச்சீர் வாக்கியம் !!!

;)

பாற்கடலைக் கடைந்தும்
கிடைத்திறாத இன்பம்
கிடைத்ததென்று அறிந்தேன்
உன் கடைப்பார்வையில்!!

காதல்,கல்யாணம்

நீ
நிழலென தொடர்ந்தாய்
என் மனதினுள் படர்ந்தாய்
உன் காதலை கொணர்ந்தாய்
நானோ,
செய்வதறியாது திகைத்து
காதலை வெறுத்து
என்னுள் ஒளிந்தேன்
ஒளிந்ததும் கண்டேன்
அங்கும் நீ !!!
உணர்ந்தேன் காதலென்று!!
உணர்ந்தேன்,
நிலவென ஒளிர்ந்தேன்
மலரென மலர்ந்தேன்
கடலென அலைந்தேன்
பரவசமடைந்தேன்.
இருக்கையில்,
வசையுடன் சேர்ந்து
விசையுடன் முடிந்த
என் மண வாழ்வில்
சுட்டெறிக்கும் வார்த்தையால்
தகனமுமானேன்
என் நெஞ்சினுள்!!!

அவள்

அன்புடன்
ஆதரித்தாள்
இன்பத்தை
ஈன்றாள்
உணர்வை
ஊட்டினாள்
என்னை உயர
ஏற்றினாள்
ஐயத்தை
ஒழித்தாள்
ஓர் அன்னையாய்
உடனிருந்தாள்
என் வாழ்வில்
அவள் !!!

நினைவு

உன்னைக் கண்டேன்
உலகை மறந்தேன்
உன் அன்பை கண்டேன்
என்னை மறந்தேன்
நீ எனக்கென உணர்ந்தேன்
விண்ணில் மிதந்தேன்
நீ இல்லையென அறிந்தேன்
உயிரை ம(து)றந்தேன்.

காதல்

அன்று
வேடன் எய்த அம்பில்
உயிர் பிழைத்தேன், மடிந்தேன்
இன்று
நீ எய்த அம்(ன்)பில் !!