Thursday, April 19, 2007

தமாசு

ஒரு சின்ன கற்பனை...English Nursery Rhymes-அ தமிழாக்கம் செஞ்சா எப்படி இருக்கும் ??? அதுவும், நம்ம சென்னை பாஷைல செஞ்சா ?????

Baa Baa Black Sheep

வா வா கறுப்பாடு
கம்பளி கீதா ?
கீது மச்சி கீது
மூணு கம்பளி கீது
ஒண்ணு நம்ம அண்ணாச்சிக்கு
ஒண்ணு நம்ம தம்பிக்கு
ஒண்ணு நம்ம ஜானுக்கு
ஊட்டாண்ட கீரான்..


Are you sleeping ?

உன்னுமா தூங்குற
உன்னுமா தூங்குற
அண்ணாத்தே, அண்ணாத்தே
சோத்து மணி அடிக்குது
சோத்து மணி அடிக்குது
போய் துன்னுடா
போய் துன்னுடா..

Bits of Paper..

துண்டு துண்டா paperரு
துண்டு துண்டா paperரு
கீஞ்சு கெடக்குது..
கீஞ்சு கெடக்குது..
ஊடு மொத்தம் நாறுது
ஊடு மொத்தம் நாறுது
பொறுக்கி போடுடா
பொருக்கி போடுடா...

Mary had a little lamb

Maryயோட குட்டி ஆடு
குட்டி ஆடு
குட்டி ஆடு
Maryயோட குட்டி ஆடு
வெளிறிப் போய் கீது..

எங்க Mary போசொல்ல
போசொல்ல
போசொல்ல
எங்க Mary போசொல்ல
பின்னாடிக்கா போச்சு...

ஸ்கூலுக்கு ஒருதபா இட்டுபோச்சு
இட்டுபோச்சு
இட்டுபோச்சு
ஸ்கூலுக்கு ஒருதபா இட்டுபோச்சு
படு பேஜாராவே போச்சு

அங்க போனா ஒரே தமாசு
ஒரே தமாசு
ஒரே தமாசு
அங்க போனா ஒரே தமாசு
சிறுசுங்க சிரிச்சாங்க...


யாரும்.. தப்பா எடுத்துக்க வேண்டாம்.. சும்மா வெளையாட்டாதான் நான் இத செஞ்சேன்...தப்பா நெனைக்காதவங்க.. அந்த rhymesa அதே tune-la பாடிப்பாருங்க..

Thursday, March 15, 2007

வெட்கம்

முகிலுக்கு வெட்கமாம்
நிலவைக் கண்டு - ??
தன் கருமை வெளிப்படுமாம் இருளில்!!!

ஐ ல்வ் யு

பற்றற்ற வாழ்வில்
மட்டற்ற இன்பம் - ??
உன் வாக்கினில் மலர்ந்த
முச்சீர் வாக்கியம் !!!

;)

பாற்கடலைக் கடைந்தும்
கிடைத்திறாத இன்பம்
கிடைத்ததென்று அறிந்தேன்
உன் கடைப்பார்வையில்!!

காதல்,கல்யாணம்

நீ
நிழலென தொடர்ந்தாய்
என் மனதினுள் படர்ந்தாய்
உன் காதலை கொணர்ந்தாய்
நானோ,
செய்வதறியாது திகைத்து
காதலை வெறுத்து
என்னுள் ஒளிந்தேன்
ஒளிந்ததும் கண்டேன்
அங்கும் நீ !!!
உணர்ந்தேன் காதலென்று!!
உணர்ந்தேன்,
நிலவென ஒளிர்ந்தேன்
மலரென மலர்ந்தேன்
கடலென அலைந்தேன்
பரவசமடைந்தேன்.
இருக்கையில்,
வசையுடன் சேர்ந்து
விசையுடன் முடிந்த
என் மண வாழ்வில்
சுட்டெறிக்கும் வார்த்தையால்
தகனமுமானேன்
என் நெஞ்சினுள்!!!

அவள்

அன்புடன்
ஆதரித்தாள்
இன்பத்தை
ஈன்றாள்
உணர்வை
ஊட்டினாள்
என்னை உயர
ஏற்றினாள்
ஐயத்தை
ஒழித்தாள்
ஓர் அன்னையாய்
உடனிருந்தாள்
என் வாழ்வில்
அவள் !!!

நினைவு

உன்னைக் கண்டேன்
உலகை மறந்தேன்
உன் அன்பை கண்டேன்
என்னை மறந்தேன்
நீ எனக்கென உணர்ந்தேன்
விண்ணில் மிதந்தேன்
நீ இல்லையென அறிந்தேன்
உயிரை ம(து)றந்தேன்.

காதல்

அன்று
வேடன் எய்த அம்பில்
உயிர் பிழைத்தேன், மடிந்தேன்
இன்று
நீ எய்த அம்(ன்)பில் !!

Monday, February 19, 2007

ஏமாற்றம்

விண்ணில் வட்டமிட்ட நிலவைக்
காணாமல் அன்று தவித்தேன்
பிறகு யோசித்தேன் அன்று அமாவாசை - ஆனால்
அன்று முதல் அமாவாசை
ஆகுமென்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லையே....

Monday, January 8, 2007

கவிதை கதம்பம் -1

இரவு

கறுப்புத் தாவணியில்
ஆயிரம் பொத்தல்கள்
கவர்ச்சிக் கூட்டும்
அழகுக் காட்சி.


சிகரெட்

உன் ஆசைக்கு இணங்கி
இரையான என்னை
காலிலிட்டு நசுக்கியது ஏன்?
உன் உயிரை வாங்கும் பயத்திலா?

கவிதைகள் ஆ'ரம்பம்' ...

இங்கு எனது கற்பனைகள், சிந்தனைகள் மற்றும் சமூகப் பார்வைகளுக்கு கவிதை வடிவம் கொடுக்க முனைந்திருக்கிறேன்.